ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடவெட்டிவலசை கிராமத்தில் வடிவேலு என்பவருக்கு ஹரிணி என்ற 16 வயது மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதல் வருடம் படித்து வந்துள்ளார்.
அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது ஹரிணியின் வழக்கமாம். இதை வீட்டினர் பலமுறை கண்டித்துள்ளனர். அவர் கேட்காமல் தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது இதையடுத்து ஹரிணியின் தாய் முருகேஸ்வரி சிறுமியை கண்டித்துள்ளார். அப்போது மன வேதனையில் இருந்த ஹரிணி விஷம் குடித்துவிட்டு யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதை அடுத்து அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் ஹரிணியே அனுமதிக்க அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.