fbpx

இந்த 5 ரூபாய் நாணயம் வைத்திருக்கும் நபரா நீங்கள்…? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுமா…?

பழைய 5 ரூபாய் நாணயங்களை வெளியிடுவதை ஆர்.பி.ஐ. நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. எனினும் தற்போது சந்தையில் பழைய ரூ.5 காசுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பழைய நாணயங்களுக்கு பதில் புதிய செப்பு நிற ரூ.5 நாணயங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பழைய 5 ரூபாய் நாணயம் செல்லாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வந்தது.

இந்தியாவில் அனைத்து பணம் சார்ந்த கொள்கைகளையும் ஆர்.பி.ஐ. பொறுப்பில் உள்ளது. ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் அச்சிட வேண்டும் என்ற முடிவும் ஆர்.பி.ஐ. வசம் உள்ளது. மத்திய அரசின் சட்டத்திருத்தங்களை பின்பற்றி ஆர்.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் காயின்களை நிறுத்துவது குறித்தும் மத்திய அரசு அறிவுரைகள் அவ்வப்போது வழங்கி வருகிறது.

தற்போது 1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. மேலும் 30 மற்றும் 50 ரூபாய் நாணயங்களை வெளியிட ஆர்.பி.ஐ. முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் 5 ரூபாய் நாணயங்களை வெளியிடுவதை ஆர்.பி.ஐ. நிறுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் நாணயங்களைத் தயாரிக்க தடிமனான உலோகம் தேவைப்படுகிறது. பலர் நாணயங்களில் இருந்து பிளேடுகளைத் தயாரிக்கின்றனர். இதனால்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுவதில்லை. பித்தளையால் ஆன 5 ரூபாய் நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் கிடைக்காது என‌ தெரிவித்துள்ளது.

English Summary

RBI has announced that it has stopped issuing 5 rupee coins.

Vignesh

Next Post

தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி.. சிவபெருமானுக்கு பிடித்த சிவன் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Thu Dec 19 , 2024
Maatrurai varadeeswari is located in Tiruvasi, about 14 km on the road from Trichy to Musiri.

You May Like