பொதுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பில், பணியிடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகளை செயல்முறையின் நடுவில் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது,
ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனத்தில் விதிமுறைகளை சிலருக்கு ஏற்ற வகையில் தளர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மூன்று நீதிபதிகள் அமர்வில் கடந்த 2013ம் ஆண்டு விசாரிக்கப்பட்டு பின்னர், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய எஸ்சி அரசியலமைப்பு பெஞ்ச், ஒரு பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் பெற்ற பிறகு அல்லது பாதியில் விதிமுறைகளை மாற்றக்கூடாது என்று தீர்ப்பில் கூறியுள்ளது. ஒருவேளை விதிகள் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அது தன்னிச்சையானதாக இருக்கக் கூடாது. பணியிடங்கள் நிரப்பப்படுவது பாகுபாடின்றி வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Read more ; ‘ரூ.50 லட்சம் கொடு.. இல்லையென்றால்..’ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகானுக்கு கொலை மிரட்டல்..!!