வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கட்டாய மத மாற்றத்தை எதிராக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003 தொடர்பாக தனது விரிவான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா முன்வைத்தார்.
மனுதாரர் தேசத்துரோக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதனை ஏற்க முடியாது என தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெல்சன் தனது வாதத்தை முன்வைக்க ஆரம்பித்தார். மனுதாரர் அஸ்வினி உபாத்யா பாஜகவின் மூத்த செய்தி தொடர்பாளராக இருப்பதால் இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மேலும் இந்த வழக்கின் மனுதாரர் மனுவின் சாராம்சத்தில் தமிழகத்தை தான் அதிகப்படியாக சுட்டிக்காடி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதமாற்றங்களை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது 2006ம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் மனுதாரர் அஸ்வினி உபாத்யா கூறியுள்ளது உண்மைக்கு புறம்பாக உள்ளது என தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் தனது வாதத்தை முன் வைத்தார். கட்டாய மத மாற்றம் தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. மாநிலங்களுக்கு எதிராக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை வெங்கட்ரமணியை நியமித்த நீதிமன்றம், அஸ்வினி உபாத்யாவை இந்த வழக்கில் இருந்து நீக்கம் செய்தது. மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.