fbpx

அதிரடி..! தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் “ஸ்டிக்கர்” ஒட்ட தடை…! தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதை காவல்துறை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் இருப்பதாக கூறியுள்ளார். வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்கள், இது போன்ற ஸ்டிக்கர் அல்லது போர்டுடன் கூடிய வாகனங்களைச் சோதனை செய்யத் தயங்குவதால், அது ஒரு காவல்துறை அதிகாரியின் செயலாக இருக்கலாம் என்று கருதுவதால் பிற எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

எனவே, அனைத்து பிரிவு அலுவலர்களும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு தனியார் வாகனத்தில் ஸ்டிக்கர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வங்கக்கடலில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்...! 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்...!

Tue Nov 28 , 2023
நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் டிசம்பர் […]
புயலுக்கு நடுவே பூக்களாய் மலர்ந்த 270 குழந்தைகள்..!! மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like