அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்படலாம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் மீண்டும் அவரவர் பொறுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ரத்தான ஊராட்சி செயலாளர், தொகுதி கழக செயலாளர், இணை செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. காலியாக உள்ள பொறுப்புகளும் விரைந்து நிரப்பப்படும் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்..
பல்வேறு காரணங்களுக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் ஆதரவை பெறுவதற்காக ஓபிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது..
முன்னதாக கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்..
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்..