fbpx

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு – அமெரிக்கா பரிசீலனை

BF7 கொரோனா பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது.

ஷாக்கிங் நியூஸ்..!! இந்தியாவுக்குள் நுழைந்தது சீனாவின் புதிய வைரஸ்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.25 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 25 லட்சத்து 26 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 63 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 364 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 88 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியா, ஜப்பான், மலேசியாவை தொடர்ந்து சீனாவிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

Kokila

Next Post

இந்தி தெரியாததால் காக்க வைக்கப்பட்ட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

Wed Dec 28 , 2022
மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, மதுரை விமான நிலையம் வழியாக விமான பயணம் மேற்கொண்ட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்களின் […]

You May Like