சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சர்க்கரை நோயின் தாக்கம் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் உணவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் உணவு நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது தான். இதனால் சர்க்கரை நோயாளியால் கட்டாயம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அந்த வகையில், அரிசி போன்ற கார்ப்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்வர்கள் பலர் எச்சரிப்பது உண்டு. ஆனால், நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை அரிசி இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அரிசி பிரியர்கள் அதிகம் உள்ளனர். இதனால் உணவை நிம்மதியாக சாப்பிடவும் முடியாமல், விடவும் முடியாமல் சர்க்கரை நோயாளிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆனால் ஒரு எளிய முறையைப் பின்பற்றினால், சர்க்கரை நோயாளிகளும் எந்த தயக்கமும் இல்லாமல் வெள்ளை அரிசியை தாராளமாக சாப்பிடலாம். ஆம், உண்மை தான். பொதுவாக, குறைந்த கிளைசெமிக் உணவுகளை தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும். இதனால் அரிசி சாதத்தில் இருக்கும் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க, அரிசியை சமைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுங்கள். அந்த சாதத்தை அடுத்த நாள் சாப்பிடும் போது குளுக்கோஸ் அளவு குறைந்துவிடும்.
இது உங்களுக்கு சாதரணமாக தோன்றாலாம், ஆனால் பல ஆய்வுகளின் படி, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குளிர்விப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இப்படி குளிரூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவதால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளில் உணவுக்குப் பிந்தைய இரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறது.
அந்த வகையில், அரிசியை குளிர்சாதன பெட்டியில் ஒரு நாள் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். அதன் படி, சமைத்த உணவுகளை குளிர்விப்பதால் ஸ்டார்ச் ரெட்ரோகிரேடேஷன் எனப்படும் ஒரு செயல்முறையை ஏற்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நமது இரத்த சர்க்கரையை அதிகரிக்காது, அதே சமயம் நமது குடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த ஹேக்கைப் பயன்படுத்தி சுகர் நோயாளிகள் தாரளமாக அரிசியை சாப்பிடலாம்.