இந்திய உணவில் சாதம், சப்பாத்தி இரண்டுமே தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த இரண்டு உணவுகளும் ஊட்டச்சத்து மதிப்பின் அடிப்படையில் ஒப்பிடப்படுகின்றன. சாதம், சப்பாத்தி இரண்டுமே கலோரிகளை வழங்கும் அதே வேளையில், முழு கோதுமை சப்பாத்தியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதேசமயம் பிரவுன் அரிசியில் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது.
சாதம் மற்றும் சப்பாத்திக்கு இடையேயான தேர்வு ஆரோக்கியம், வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ஆனால், உடல் எடையை குறைக்க சாதம் சிறந்ததா அல்லது சப்பாத்தி சிறந்த தேர்வா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன? உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்று பார்க்கலாம்.
ஊட்டச்சத்து ஒப்பீடு : சப்பாத்தியில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கும். இது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கவும் உதவுகிறது. அரிசியில் குறைந்த கொழுப்பு, ஸ்டார்ச்ச் இருப்பதால் அது எளிதில் ஜீரணமாகும்.
அரிசியுடன் ஒப்பிடுகையில், சப்பாத்தியில் கிளைசமிக் குறீயிடு குறைவாக உள்ளது, இது சர்க்கரை அளவை உயர்த்தாது. எனவே தான் நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதே நேரம் வெள்ளை சாதத்தில் கிளைசமிக் குறியீடு அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரையின் விரைவான உயர்வை ஏற்படுத்தும்.
கலோரி ஒப்பீடு : 100 கிராம் சமைத்த வெள்ளை சாதத்தில் தோராயமாக 130 கலோரிகள், 2.7 கிராம் புரதம், 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.3 கிராம் கொழுப்பு உள்ளது. 200 கிராம் சமைத்த அரிசியில் 260 கலோரிகள் உள்ளன. வெள்ளை அரிசி மெருகூட்டப்பட்டதால், தவிடு மற்றும் கிருமி நீக்கம் காரணமாக குறைந்த நார்ச்சத்து உள்ளது.
அதே நேரம் 100 கிராம் சப்பாத்தியில் (சுமார் 2.5 நடுத்தர அளவிலான சப்பாத்தி) சுமார் 250 கலோரிகள், 9 கிராம் புரதம், 49 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3 கிராம் கொழுப்பு உள்லது. முழு கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. சப்பாத்தியில் சேர்க்கப்படும் நெய் அல்லது எண்ணெய்யின் அளவை அளவைப் பொறுத்து கலோரி அதிகரிக்கும்
எடை இழப்புக்கு எது சிறந்தது? உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சப்பாத்தியே சிறந்தது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சப்பாத்தியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குறைந்த கலோரி உணவில் நன்மை பயக்கும், இது நீண்ட நேரம் நிறைவாக உணர உதவுகிறது.
அரிசி ஜீரணிக்க எளிதானது, ஆனால் அதன் குறைந்த நார்ச்சத்து உங்களுக்கு விரைவாக பசியை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிரவுன் சாதத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
அரிசி மற்றும் சப்பாத்தியின் நன்மைகள்
அசிடிட்டி அல்லது வயிற்றுக் கோளாறு போன்ற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அரிசி சிறந்த தேர்வாகும். ஏனெனில் இது லேசாகவும் ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும்.
முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால் எடையைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இது நன்மை பயக்கும்.
Read More : குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் பாதுகாப்பானதா?. மாரடைப்பு அபாயம்!. இந்த தவறை செய்யாதீர்கள்!.