தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் சமீப காலமாக சிறுவயது குழந்தைகளும் மாணவ, மாணவிகளும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதிலிருந்து மீள்வது எப்படி? என்று தெரியாமல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தவிர்த்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த தற்கொலையிலிருந்து மீள்வது எப்படி என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி இன்று தமிழகத்தில் எழுப்பி உள்ளது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மன உளைச்சல் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட உள்புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். “மாணவர்கள் மன உளைச்சல் அதிகம் காணப்படும் இந்த வேளையில் அதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் தான். எனவே மன உளைச்சலில் இருப்போரிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி அவர்களை தேற்றுவது, ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சையளிப்பது என ஏதாவது ஒன்றை உடனடியாக செய்யவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மனஉளைச்சலில் இருப்பவர்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து தப்பிக்க வைக்க முடியும்”