fbpx

வந்தாச்சு…! அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம்…! தமிழக அரசு அரசாணை வெளியீடு

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பச்சரிசியை பொருத்தவரை, ஒரு கிலோ ரூ.35.20 என்ற விலையில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.77.29 கோடி செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒருகிலோ சர்க்கரை ரூ.40.61-க்கு கொள்முதல் செய்ய ரூ.89.18 கோடி, போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி உட்பட முழு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.72.46 கோடி என மொத்தம் ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பச்சரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திடம் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாத விலையில் கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பில் திமுக...! பஞ்சமி நிலம் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!

Wed Jan 10 , 2024
முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளார். திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் […]

You May Like