fbpx

கல்லூரி மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பங்களை 2 நாட்களில் திருத்தம் செய்யலாம்..!

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் வேண்டிய திருத்தங்கள் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனறு இருந்த திட்டத்தினை பெண் பிள்ளைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகூடங்களில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் மாதாமாதம் 1,000 ரூபாய் உயர் கல்விக்கான உறுதித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும், அரசு பள்ளிகூடங்களில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  

இந்த திட்டத்தினைச் செயல்படுத்த‌, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக, இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவிகளின் விவரங்களை 25.06.2022 முதல்‌ 30.06.2022 க்குள்‌ சிறப்பு முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில்‌ பதிவிட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு ஜூலை 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இளநிலை பயிலும்‌ மாணவிகளிடம் இருந்து, அவர்களது சுய விவரங்கள்‌ மற்றும் வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌, மேலும் அவர்கள் பயின்ற அரசு பள்ளியின் விவரங்கள்‌ பெறப்பட்டன.

மாணவிகள்‌ விண்ணப்பிக்க கொடுக்க வேண்டிய ஆவண நகல்கள்;-

  1. ஆதார்‌ கார்டு.
  2. வங்கி கணக்குப் புத்தகம்.
  3. பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ பட்டியல்‌.
  4. பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌.
    5.சுய விவரங்கள்‌, 
    6.வங்கிக்‌ கணக்கு விவரங்களைக் கொண்டு விண்ணப்பித்தனர்.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தேவைப்படும் திருத்தங்களை செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர் கல்வித்துறை உத்தரவு அனுப்பியுள்ளது.

Baskar

Next Post

குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தம்பி... தட்டி கேட்ட அண்ணனுக்கு சரமாரியாக கத்தி குத்து..!

Mon Aug 1 , 2022
சென்னை கோடம்பாக்கம் பகுதியில்‌ வசிப்பவர் லோகநாதன், பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு தங்கதுரை (38) உதயகுமார் (37) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார் டிரைவராக வேலை செய்து வரும் தங்கதுரை மனைவி ஜெயந்தியுடன் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியரான உதயகுமார் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனியில் தனியாக இருக்கிறார். இந்நிலையில் பார்வதி நேற்று இரவு தனது இளைய மகன் உதயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார் […]

You May Like