fbpx

ரூ.1000 பிளஸ் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரவில்லையா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 07.01.2024 முதல் 09.01.2024 வரை பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள். நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு 10.01.2024 முதல் 14.012024 வரை தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக் கடை விற்பனை முனைய இயந்திரத்தில் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவேரனும் ஒருவர் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படமாட்டாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Vignesh

Next Post

தமிழகமே...! அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகள் கட்டாயம்...! பத்திர பதிவுத்துறை அமைச்சர் அதிரடி...!

Sun Jan 7 , 2024
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக்கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையில் கடந்த வருடம் டிசம்பர் 2022-ஆம் ஆண்டு […]

You May Like