fbpx

கோவை அருகே போலி ரசீது தயாரித்து ஜிஎஸ்டி மோசடி…..! தொழிலதிபர் அதிரடி கைது…..!

கோவை ஜிஎஸ்டி இயக்குனரக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் போலி ரசீது தயார் செய்து வரியைப்பு செய்தது குறித்து தொழிலதிபர் ஒருவரின் வீடு மற்றும் வணிக நிறுவன வளாகங்களில் கடந்த 15 ஆம் தேதி ஜி எஸ் டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் 98 கோடி ரூபாய் மதிப்பில் போலி ரசீது தயார் செய்து ஜிஎஸ்டி அலுவலகத்தை ஏமாற்றி 13 கோடி ரூபாய் இன்புட் டேக்ஸ் கிரெடிட் என்ற முறையில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இவரது செயலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தவறை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலியான ரசீதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற தொழில் நிறுவனங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கோவை ஜிஎஸ்டி இயக்குனராக நுண்ணறிவு பிரிவு அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Next Post

திருச்சி| மது குடித்ததால் உயிரிழந்த 2 பேர் உறவினர்கள் குற்றச்சாட்டு…..! காவல்துறையினர் தீவிர விசாரணை……!

Sun Jun 18 , 2023
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய நிலையில் தான் முனியாண்டி உடன் […]

You May Like