fbpx

5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.15,000 மானியம்…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

விவசாயிகளின்‌ நிலத்தடி நீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ ரூ.15 ஆயிரம்‌ மானியம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மின்‌ இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள்‌ பழைய திறனற்ற மின்மோட்டார்‌ பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்‌, புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து 10 குதிரை திறன்‌ வரை புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள்‌ பட்டா, சிட்டா, அடங்கல்‌, நில வரைபடம்‌, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலகங்களை அணுகலாம்‌.

Vignesh

Next Post

மக்களே எச்சரிக்கை!… இப்படிகூட மோசடியா?… ராமர் கோயில் பெயரில் பணம் வசூல்!

Mon Jan 1 , 2024
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து நன்கொடை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய மோசடிகள் அரங்கேறிவருகின்றன. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். தரிசனம் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள இந்து மத நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலோனோர்கள் இந்த கோயில் […]

You May Like