2024-2025 -ஆம் நிதி ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்து அதிக வரி வருவாய் ஈட்டித் தந்த 39 வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.20,000 ஊக்கத் தொகை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன், வணிக வரித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் கழிவு செய்யப்பட்ட ஏழு வாகனங்களுக்கு பதிலாக ரூ. 61,30,474/-மதிப்பீட்டில் புதிய ஏழு Mahindra Bolero வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை(வடக்கு). காஞ்சிபுரம், ஈரோடு, கடலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் கோட்டங்ளில் பணிபுரியும் அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக துவக்கி வைக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் திடீர் ஆய்வு மற்றும் செயலாக்க நடவடிக்கைகளின் காரணமாக ரூ.1692 கோடி கூடுதல் வருவாய். (2023-24 ஆம் ஆண்டு ரூ.1335 கோடி, 2024-25 ஆம் ஆண்டு ரூ.3027 கோடி) ஈட்டி தந்த தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் 39 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.20,000/- ஊக்கத்தொகை அமைச்சர் வழங்கினார்.
மேலும், மதுரை கோட்டம். போடிநாயக்கனுர் வரிவிதிப்பு சரகத்தை சார்ந்த மறைந்த வணிகர் சத்தியமூர்த்தி குடும்பத்தினரான மகாலட்சுமி அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/-(ரூபாய் மூன்று இலட்சம் மட்டும்) காசோலை வழங்கினார்.