fbpx

89000 பேரிடம் 4400 கோடி நிதி மோசடி…..! ஹிஜாவு நிறுவன மேலாளர் கணவருடன் சிக்கியது எப்படி…..?

சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இந்த நிதி நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கபரும் விதத்தில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகளை வழங்கியது.

அதாவது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் வாட்டி கொடுக்கப்படும் மிகப் விரைவில் முதலீட்டை விட அதிக அளவு லாபத்தை எங்கள் நிறுவனத்தின் மூலமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் தெரிவித்துள்ளனர் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர் இப்படி பல கோடி ரூபாய் வரையில் பொதுமக்களிடமிருந்து அந்த நிறுவனம் முதலீடாக பெற்றது ஆனாலும் அந்த நிறுவனம் தெரிவித்தபடி வட்டி தொகை வழங்காமல் இருந்தது. வட்டி தொகையை கேட்டாலும் நிறுவனம் சார்பாக சரியாக யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் முதலீடு செய்த பலரும் தங்களுடைய முதலீட்டு தொகையை திரும்ப கேட்டுள்ளனர். நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளனர். ஆகவே முதலில் செய்த மக்கள் அனைவரும் இந்த நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் வழங்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனம் பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அந்த நிறுவனம்.89000 பேரிடம் 4400 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் ஒட்டுமொத்தமாக 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அந்த நிறுவனம் சார்ந்த பகுதிகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3.34 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டது அதோடு 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

இதற்கு நடுவே அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தலைமறைவாகி இருக்கின்றனர். அவர்களை கைது செய்யும்.நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாளரான சுஜாதா காந்தா அவருடைய கணவர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Next Post

”அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே”..!! செல்லூர் ராஜூவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜக..!!

Sun Jun 18 , 2023
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி எதிர்கொண்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியே கிடைத்தது. இந்நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு தரப்பிற்கும் அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என அண்ணாமலை கடந்த வாரம் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு அதிமுகவினர் […]

You May Like