fbpx

“ தனது சொந்த ஆட்களால் ரஷ்ய அதிபர் புடின் படுகொலை செய்யப்படுவார்..” ஜெலென்ஸ்கி சொன்ன தகவல்..

உக்ரைன்-ரஷ்யா போரை கையாண்ட விதத்திற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நெருங்கிய வட்டத்தில் நபர்களால் படுகொலை செய்யப்படுவார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் டிமிட்ரோ கொமரோவ் இயக்கிய ‘Year’ என்ற ஆவணப்படத்தில் உக்ரைன் அதிகர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் “ரஷ்யாவில் புடினின் ஆட்சியின் பலவீனம் உணரப்படும் ஒரு தருணம் நிச்சயமாக இருக்கும்.

உக்ரைனின் மரியுபோல் நகரில் மட்டும் எத்தனை உயிர்கள் பறிபோகியுள்ளது தெரியுமா?

அப்போது மாமிச உண்ணிகள் மாமிசத்தை உண்பார்கள். இது மிகவும் முக்கியமானது.. இதை நியாயப்படுத்த அவர்களுக்கு ஒரு காரணம் தேவைப்படும். அவர்கள் ஜெலென்ஸ்கியின் வார்த்தைகளை நினைவுபடுத்துவார்கள்… அவர்கள் கொலையாளியைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். எனவே தனது நெருங்கிய வட்டத்தில் உள்ள நபர்களால் புடின் கொலை செய்யப்படுவார்.. ஆனால் அது எப்போது என்று எனக்குத் தெரியாது, “என்று தெரிவித்தார்..

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய கூட்டாளிகள் அவர் மீது விரக்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. மறுபுறம், ரஷ்யாவின் பல உயர் அதிகாரிகள் புடினுக்கு நன்றிக்கடன்ப்பட்டிருப்பதால் இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

உக்ரைன் – ரஷ்யா இடையே ஓராண்டுக்கு மேல் போர் நடைபெற்று வருகிறது.. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் உதவி வரும் நிலையில், ரஷ்யா மீது பல்வேறு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.. உலகிலேயே அதிக தடைகளை எதிர்கொள்ளும் நாடாக ரஷ்யா உள்ள போதிலும், போதிலும் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள்) ரஷ்ய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Maha

Next Post

74 மருந்துகளுக்கான விலையில் அதிரடி மாற்றம்..!! வெளியான புதிய பட்டியல்..!!

Tue Feb 28 , 2023
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான சில்லரை விற்பனை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.  தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 109-வது கூட்டம் நடைபெற்றது. இதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 மருந்துகளுக்கான விலையை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டு ஆணை 2013 […]

You May Like