fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு.. எவ்வளவு தெரியுமா..?

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அடுத்தடுத்து நற்செய்திகள் வெளியாக உள்ளது.. அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாக உள்ளது. ஆம்.. மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஃபிட்மென்ட் காரணியை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழிகாட்டு

ஹோலிக்குப் பிறகு (மார்ச் 8) மார்ச் மாதத்தில் ஃபிட்மெண்ட் காரணி மற்றும் அகவிலைப்படியை (DA) அரசாங்கம் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் இப்போது ஃபிட்மெண்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இந்த உயர்வின் மூலம் குறைந்தபட்ச ஊதியம் தற்போது ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயரும்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. அந்த வகையில் இந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது..

கடந்த செப்டம்பர் 2022ல், மத்திய அரசு, அகவிலைப்படியை 3% அதிகரித்தது.. இதன் மூலம் அகவிலைப்படி 38% ஆக அதிகரித்தது.. இதன் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

எடப்பாடியிடம் சரணடையுங்கள்……! ஓபிஎஸ்-க்கு யோசனை தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்……!

Sun Feb 26 , 2023
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எதையும் அறிவிக்க கூடாது என்பதுதான் தேர்தல் விதிமுறை.ஆனால் முதலமைச்சர் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது தொடர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதலமைச்சர் பேசியது தேர்தல் விதி மீறல் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்வது தவறு. […]

You May Like