சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியில் சாக்கு முட்டையை வைத்து ஒருவர் கள்ளச்சாராய விற்பனை செய்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்வதும் சாராயம் விற்பனை செய்யும் இடத்தில் இளைஞர் ஒருவர் பாக்கெட் சாராயத்தை குடிப்பது போன்று அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் அடிப்படையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது வீரகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் விவசாய நிலத்தில் சுமார் 110 லிட்டர் சாராயம் அடுக்கி வைத்திருந்த புனல் வாசல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.