fbpx

செம வாய்ப்பு…! விவசாயிகளுக்கு ரூ‌.6,000 வழங்கும் திட்டம்… வரும் 21-ம் தேதி வரை சிறப்பு முகாம்…!

விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தில் இதுவரை பயனடையாமல் உள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொருத்து அவர்களுக்கு 15 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.

இத்திட்டத்தில் இதுவரை சேராத நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளை சேர்த்து பயனடையச் செய்யும் பொருட்டும், ஏற்கனவே திட்டத்தில் உள்ள பயனாளிகள் eKYC பதிவுகள் மேற்கொள்ள வசதியாக 12.02.2024 முதல் 21.02.2024-ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாம் குறித்து சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்களை அணுகி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் கோபுரம் தெரியும் அதிசயம்.? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது.!?

Wed Feb 14 , 2024
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் அதற்கென தனிச்சிறப்புடைய வரலாறு, அதிசயங்கள், மற்றும் மர்மங்கள் என பல இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்? பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட […]

You May Like