fbpx

Woww..! கல்வி உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு…! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை..‌!

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், பட்டயப்படிப்பிற்கு ரூ.2500/-ம் கடந்த 2021-2022ம் கல்வியாண்டு வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், பட்டப்படிப்பிற்கு ரூ.10,000/-ஆகவும், பட்டயப்படிப்பிற்கு ரூ.5,000/- ஆகவும் உயர்த்தி 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்களின் குழந்தைகள் (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகையாக (Tuition fees) ரூ.50,000/-ம் தொழிற்கல்வி பட்டயப்படிப்பிற்கு ரூ.15,000/-ம் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தெரிவித்து அதனடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் குழந்தைகளை தெரிவு செய்ய மாநில அளவில் குழு அமைக்க அனுமதி அளித்து ஆணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இனி ஆயுஷ்மான் பாரத் இல்லை!… ஆரோக்கிய மந்திர்!… சுகாதார மையங்களின் பெயர் மாற்றம்!… மத்திய அரசு அறிவிப்பு!

Mon Nov 27 , 2023
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மையங்களின் பெயர்களை மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்க கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் ஆயுஷ்மான் பாரத் யோஜனா உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், […]

You May Like