fbpx

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே…! முதற்கட்டமாக வருகிறது 200 பேருந்துகள்…! முழு விவரம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிபயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், MTC நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதுமட்டுமின்றி பேருந்து புறப்பட்ட உடன் ஓடி வந்து ஏறுவது, ஒரு காலை தரையில் தேய்த்தபடி செல்வது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாரடைப்பு, ஆஸ்துமா, மூட்டுவலி போன்றவை ஏற்படாமல் தடுக்கும் மல்லி விதை..! எப்படி பயன்படுத்துவது..!

Mon Feb 5 , 2024
பொதுவாக நம் தமிழ்நாட்டில் சமையல் அறையில் இருக்கும் பல பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாகவே இருக்கின்றன. அந்த வகையில் சிறப்பு வாய்ந்ததாகவும், மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் இருந்து வரும் மல்லிவிதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்? 1. மல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் குடிக்கும் போது இரத்தத்தில் […]

You May Like