fbpx

வகுப்புகள் எப்படி நடத்த வேண்டும்…? தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது; தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2 மற்றும் 3-ம் வகுப்புகளுடன், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது. அதாவது, இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் பாடம் நடத்த வேண்டும்.

அதேபோன்று, 3 அல்லது 4 ஆசிரியா்கள் உள்ள பள்ளிகளில் தேவைக்கேற்ப வகுப்புகளை பிரித்து பாடங்களை நடத்த வேண்டும். மேலும், போதிய ஆசிரியா்கள் இருப்பின் தனித்தனி வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்தலாம். இந்த வழிகாட்டுதல்களை ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உஷார் மக்களே...! இந்த 13 மாவட்டத்தில் மட்டும் இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை....!

Mon Jun 19 , 2023
தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலார்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

You May Like