கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எல்வனாசூர்கோட்டை என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், 57 வயதான தண்டபாணி என்ற நபர் ஒருவர், டீக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பாட்டி, உடனடியாக சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், டீக்கடை நடத்தி வந்த தண்டபாணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதே போன்ற, மற்றொரு சம்பவமும் அதே பகுதியில் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த, 11 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமிக்கு, 58 வயதான முகமது யாகூப் என்ற நபர் ஒருவர் தின்பண்டம் வாங்கி கொடுத்துள்ளார். சிறுமியும் அதனை வாங்கியுள்ள நிலையில், அவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தண்டபாணி மற்றும் முகமது யாகூப் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே பகுதியில் நடந்த இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: உறவினருடன் மலைக்கு சென்ற பெண்; பலாத்காரம் செய்வதை வீடியோவாக எடுத்து மகிழ்ந்த இளைஞர்கள்..