fbpx

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு… அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும். இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம்.

இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இது தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

School Level Competitions Class 1st to 9th Class Schedule in Academic Year Schedule

Vignesh

Next Post

பாம்பு கொடுத்தால் தான் கல்யாணம்... வினோத சடங்குகளை பின்பற்றும் மக்கள்..!! எங்கு தெரியுமா?

Tue Aug 27 , 2024
Let's look at a village in India that follows the traditional practice of giving snakes as dowry to the bridegroom at the time of marriage.

You May Like