பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவனை பள்ளிக்குப் போக சொல்லி தாய் கண்டித்ததால், மாணவன் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே இருக்கின்ற உரசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரின் மகன் சிவகிரி (14). இவர் உரசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர், உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் தான், மாணவன் சிவகிரி பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவருடைய தாய் செல்வி கண்டித்துள்ளார்.
ஆகவே அந்த மாணவர் வருத்தத்துடன் காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, தன்னுடைய தாயின் குரலில் நீயே எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவர் சிவகிரி. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய தகவலின் படி, கடத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி, தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மாணவனின் மரணம் தொடர்பாக கடத்தூர் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உரசல்பட்டி கிராமத்தில், அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.