உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி என்ற பகுதி ஒன்றில், தனியார் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குல்திப் யாதவ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர், ஆபாச படம் பார்த்துள்ளார். இத்தனை அங்கிருந்த எட்டு வயது மாணவன் பார்த்து விட்டான். இதையடுத்து, மாணவன் இது குறித்து தனது நண்பர்களிடம் கூறி சிரித்துள்ளார். மாணவர்கள் தன்னை பார்த்து சிரிப்பதை ஆசிரியர் கவனித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், எட்டு வயது சிறுவனின் தலைமுடியை பிடித்து சுவரின் மீது பலமாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த மாணவனின் தந்தை ஜெய் பிரகாஷ், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து பேசும் போது, “இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி தண்டனை அளிக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
Read more: ஆண்களே உஷார்!!! கொதிக்கும் தண்ணீரை கணவன் மீது ஊற்றிய மனைவி.. ஆண் நண்பர்களால் நேர்ந்த சோகம்..