fbpx

கவனம்…! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…! ஆனால் ஒன் கண்டிஷன்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி முழுவீச்சில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைத்தல். குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகம், சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Vignesh

Next Post

தமிகழமே குஷியோ குஷி..! தேர்வுகள் வரும் 13-ம் தேதிக்கு அதிரடி மாற்றம்... முதல்வர் போட்ட உத்தரவு...!

Mon Dec 11 , 2023
மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி […]

You May Like