இந்தியா கோவில்கள் நிறைந்த பூமி. ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள ஒரு கோவில் தனிச்சிறப்பு பெற்றது. இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தான் தன்னாலாட். கடலில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பாறைகள் நடு கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் பல சிறப்புகள் உள்ளன அவைகளை பற்றி கீழே காணலாம் வாருங்கள்
தன்னாலாட் என்பதற்கு இந்தோனேசிய மொழியில் அர்த்தம் என்னவென்றால் கடலின் நிலம் ஆகும். இந்த கோயிலானது பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட 7 கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலை பார்த்தால் தெரியும்படி கட்டப்பட்டுள்ளது. 16 -ம் நூற்றாண்டின் டாங்யாங் நிரார்த்தா என்பவரால் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள். இவர், தென் கடற்கரையில் மேற்கொண்ட தனது பயணத்தின்போது தீவு பாறையில் அமைந்துள்ள அழகிய அமைப்பைக் கண்டுள்ளார்.
பின்னர், அங்கு ஓய்வெடுக்க முடிவெடுத்து இரவை அங்கேயே கழித்தார். இதையடுத்து, அங்குள்ள மீனவர்களிடம் பாறையில் ஒரு கோயில் கட்டும்படி கூறினார். ஏன் என்றால் இந்த இடமானது பாலினிய கடல் கடவுள்களை வணங்குவதற்கான புனித இடமாக அவர் உணர்ந்தார். இந்த கோயிலின் முக்கிய அம்சம் என்னவென்றால், கோயிலின் பாதுகாப்பிற்காகவும், பல தீய மனிதர்கள் மற்றும் தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்க கோயிலுக்கு அடியில் அதிக விஷத்தன்மை வாய்ந்த கடல் பாம்புகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த பாம்புகள் தான் கோயிலை பாதுகாத்து வருவதாகும் சொல்லப்படுகிறது.
இந்த கோயில்கள் பல நூற்றாண்டுகளாக சேதமில்லாமல் இருந்த நிலையில், 1980 -ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயலின் காரணமாக கோயிலின் பாறை முகம் நொறுங்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ள பகுதியும், கோயிலின் உட்பகுதியும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் எழுந்தது. இதனால், கோயிலில் உள்ள சில பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர், ஜப்பான் அரசு வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் மற்றும் பாலி சுற்றி அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தோனேசிய அரசிற்கு கடனாக நிதியுதவி வழங்கியது. பின்னர், கோயில்களை சீரமைத்து பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்பட்டது.
Read more ; இந்த திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் அதிகரிக்குமா..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!