fbpx

விஜயுடன் கூட்டணி வைக்கும் நாம் தமிழர் கட்சி? – மறைமுகமாக சீமான் சொன்ன விஷயம்!!

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து சீமான் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது சினிமா பணிகளை முடித்து கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததும் சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா என தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. இதுகுறித்து தற்போது சீமான் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் “எனது தம்பி விஜய் செப்டம்பர் மாதத்தில் கட்சி பணிகளை தொடங்குகிறார். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில்தான் யோசிக்க முடியும். தேர்தல் கூட்டணி பற்றி தம்பி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும். அதை அப்போது பேசுவோம். இப்போது பேசி பயனில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், திருச்சி பொலிஸ் சூப்பிரண்டு வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. என்னையும், எனது குடும்பத்தில் உள்ளவர்களையும், கட்சியில் உள்ள பெண்களையும் இழிவுபடுத்துகின்றனர். இதற்கு காரணம் வருண்குமாரின் ஆதரவாளர்கள் தான் என்று சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.   

Read more ; தமிழ்நாட்டில் மாறிய டிராபிக் ரூல்ஸ்.. இனி இதுதான் தண்டனை!! வாகன ஓட்டிகளே உஷார்!!

English Summary

Seeman has given an answer on whether actor Vijay will have an alliance with the party in the Tamil Nadu assembly elections to be held in 2026.

Next Post

வீண் அவதூறு.. மன உளைச்சல்..!! வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்ட யுவன்..!!

Sun Aug 18 , 2024
On behalf of Yuvan Shankar Raja, his lawyer has sent a notice to the owner of his house, Hajmat, seeking damages of Rs 5 crore for defaming him and causing emotional distress.
#HappyBirthdayU1..! 'இதயத்தின் வலிகளை தொலைக்கச் செய்த இசைக்கு இன்று பிறந்தநாள்..!

You May Like