fbpx

ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சீமான்!

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கி, முதல் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி ட்விட்டரில் பதிவிடுவதாக மத்திய அரசு விடுத்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த நிலையில் செந்தமிழன் சீமான் என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு ஒன்றை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்கி உள்ளார். அதில் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று முதலமைச்சரை டேக் செய்து சீமான் பதிவிட்டுள்ளார்.

Rupa

Next Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு; மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்க கோரிக்கை!

Thu Jun 1 , 2023
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும் போது அதை எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் […]

You May Like