பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல மூத்த பத்திரிகையாளர் ரவி வர்மா காலமானார். அவருக்கு வயது 60. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் தனது சகோதரியுடன் கேரளாவில் தங்கியிருந்தார். தேசாபிமானி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். பின்னர் அவர் சத் வர்தா மற்றும் ஏசியாநெட் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.
இணைய ஊடகமான நவமலையாளியின் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவரது தந்தை மறைந்த ரவி வர்மா, பெங்காலி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.