fbpx

அமைச்சரானதும் செந்தில் பாலாஜி எடுத்த முதல் ஆக்ஷன்.. டாஸ்மாக் கடைகளில் வந்த அதிரடி மாற்றம்..!!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதிவி ஏற்ற ஒரு நாளிலே டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளார். இந்த நடைமுறை முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பில்லிங் முறை : டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர். மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சிறையில் இருந்து வெளிவந்த மூன்றே நாளில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Read more ; சூட்கேஸில் நிர்வாண நிலையில் பெண் சடலம்… சேலத்தையே அதிர வைத்த கொடூர சம்பவம்..!! பின்னணி என்ன?

English Summary

Senthil Balaji, on the day of his re-instatement as a minister, has implemented the procedure of issuing a bill for a bottle of alcohol in Tasmac shops.

Next Post

பெண்களே தாடை வலி, அதிக வியர்வை இருக்கிறதா…! மாரடைப்பு அறிகுறியாம்..!

Tue Oct 1 , 2024
Heart Attack Sign Women Shouldn’t Ignore

You May Like