fbpx

அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்!. 9 பேர் பலி; மின் துண்டிப்பு இருளில் மூழ்கிய 30,000க்கும் மேற்பட்ட வீடுகள்!

அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியுள்ளார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து, கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க வேண்டியுள்ளது. தாய் மற்றும் 7 வயது குழந்தை உட்பட பெரும்பாலான இறப்புகள் கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டது. மக்கள் சாலைகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் தொடங்கியதிலிருந்து, மாநிலம் முழுவதும் 1,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதால் மின் தடைகள் அதிகரிக்கக்கூடும், என்றார். பெரும்பாலான பகுதிகளில் 15 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நிறைய நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது என வானிலை ஆய்வாளர் பாப் ஓரவெக் தெரிவித்தார்.

Readmore: சீமானுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல். நேரில் ஆஜராக சம்மன்..!! விரைவில் கைது..?

English Summary

Severe storms and floods in the United States! 9 people dead; more than 30,000 homes plunged into darkness due to power outages!

Kokila

Next Post

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி..? வாகன ஓட்டிகளே இது கட்டாயமாம்..!! வழிமுறைகள் இதோ..!!

Mon Feb 17 , 2025
It has been made mandatory to link Aadhaar and cell phone number with driving license, vehicle RC.

You May Like