திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் 21 வயது நிறைந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் மானஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனான வினோத் (40) என்பவர் வசித்து வந்துள்ளார்.
வினோத் திருச்சியில் இருக்கும் தனியார் துறைக்கு சொந்தமான ஒரு யானைக்கு பாகனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 22ஆம் தேதி அன்று பாட்டி வெளியே சென்ற நிலையில் மாற்றுத்திறனாளியான பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட அங்கே சென்றுள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த வினோத், மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி உள்ளார். இதன் பின்னர் வெளியே சென்றிருந்த பாட்டி வீட்டிற்கு வந்தபோது அவரிடம் , மாற்றுத்திறனாளி பெண் நிகழ்ந்ததை கூறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பாட்டி, இது பற்றி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.