பெண்களுக்கு குறிப்பாக பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வாரங்களாக அதிகளவில் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளில் பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மூன்று ஆசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது
திருச்சி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ம் வகுப்பு சிறுமியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் பள்ளி தாளாளரின் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளி மாணவியை போட்டோ எடுத்து வர்ணித்ததுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களும் கடந்த ஒரு வார இடைவெளியில் அரங்கேறியுள்ளன. பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வியே முதல் மற்றும் முக்கிய கருவி என நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவார்கள் என நம்பிக் கொண்டிருந்தால், அவர்களின் வாழ்க்கையையே சிதைக்கும் செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பெற்றோரை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
Read more : சட்டம் படித்தவரா நீங்கள்..? தமிழ்நாடு CBCIDயில் வேலை.. கை நிறைய சம்பளம்..!! – விண்ணப்பிக்க ரெடியா..?