பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவரை பட்டப் பகலில் நான்கு ஆண்கள் சேர்ந்து வாள் கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்த வயது முதிர்ந்த பெண் ஒருவரை நான்கு நபர்கள் வாளை வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோர்ட் வளாகத்திற்கு முன்பாக நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பானது. பட்டப் பகலில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்த வயது முதிர்ந்த பெண்ணை நான்கு பேர் வாளால் கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அந்தப் பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிதாகோட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள பெரோஸ்பூர் எஸ்எஸ்பி ஸ்வபந்தீப் கவுர் குற்றவாளிகள் விரைவில் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். எஸ் ஏ டி கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பதல் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் இயலாமையை குற்றம் சாட்டியிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் பஞ்சாபில் குற்றச் செயல்கள் அதிகமாக உள்ளதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.