fbpx

அதிர்ச்சி!. கர்நாடகாவில் ஒரே நாளில் , 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு!. 10 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!.

Dengue: கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 2,557 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு – 202; தார்வாட், ஹாசன், மாண்டியா, தட்சிண கன்னடாவில் தலா – 20; கோலார், சித்ரதுர்காவில் தலா – 17; ஷிவமொகா – 16; துமகூரு, பாகல்கோட், கலபுரகி தலா – 12 உட்பட 424 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை, 9,082 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகா, சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யதீஷ், 50, என்பவர் டெங்கு பாதிப்புக்கு நேற்று உயிரிழந்தார்.

Readmore: கொத்து கொத்தாக பலியாகும் பாலஸ்தீனர்கள்!. இஸ்ரேல் தாக்குதலில் 90 பேர் பலி!. 300 பேர் படுகாயம்!

English Summary

Shock!. In one day, 1,242 people were infected with dengue in Karnataka! Affected close to 10 thousand!

Kokila

Next Post

தூள்...! பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு...! முழு விவரம்

Sun Jul 14 , 2024
Extension of time till December 2024 for obtaining birth certificate

You May Like