fbpx

அடச்ச,என்ன மனுஷன்யா நீயெல்லாம்….? 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன்…..!

நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதைவிட கொடுமை என்னவென்றால் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரையில் இந்த பாலியல் வன்கொடுமையில் சிக்கி கொள்வதுதான்.

இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம், மூதாட்டி பாலியல் பலாத்காரம் என்ற செய்தியை படிக்கும் போது இருக்கும் வேதனையை விட சிறுமிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் நிகழ்கிறது என்று செய்தித்தாள்களில் பார்க்கும்போது, ரத்தம் கொதிக்க தான் செய்கிறது.ஆனால் நம்மால் கோபப்பட தான் முடியுமே தவிர அப்படியான குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியாது என்பதை நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியரின் 20 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் குழந்தை ஏன் அழுகிறது? என்பதை பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

அதாவது அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னதை கேட்ட பெற்றோர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் அண்டை வீட்டாரிடம் காவல்துறையினர் கிடக்குப்பிடி விசாரணை நடத்திய நிலையில், பெற்றோர் இல்லாத சமயத்தில் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக அண்டை வீட்டார் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்டவர் மீது கொசு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் காவல்துறை வழக்கு பதிந்து கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.ஆனால் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்..!! அதிரடி உத்தரவு..!! ஆர்வம் காட்டும் அதிமுகவினர்..!!

Wed Jan 25 , 2023
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 1996ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி 44, 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம், வைரம், ரூபி, […]

You May Like