fbpx

அதிர்ச்சி!. தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்!. ஒரு பிரெட் பாக்கெட் ரூ.1,100!. கனடா, காசாவின் அவலம்!

Food shortage: போர் உள்ளிட்டவற்றால் கடும் உணவுப் பஞ்சம் நிலவரும் கனடா, காசாவில் ஒரு பிரெட் பாக்கெட் விலை ரூ.1,100க்கு விற்பனையாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் நிலைமை மிகவும் மோசமாக மாறி இருக்கிறது. பசி, பட்டினி என மக்கள் தவித்து வருகின்றனர். தெற்கு காசாவில் லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கினாலும், அவற்றை பெற ஏராளமான மக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பசியிலும், பட்டினியிலும் தவித்து வருகின்றனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு பிரெட் பாக்கெட் (15 ரொட்டித்துண்டுகள் கொண்டது) விலை ரூ.1100 ஆக விற்கப்படுகிறது. சராசரியாக ஒரு துண்டு ரொட்டி மட்டும் 73 ரூபாய் எனலாம்..ஒரு கிலோ வெங்காயம் ரூ.845, சமையல் எண்ணெய் ரூ.1,267 என விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, கட்டுப்பாடில்லாத விலை என காசா மக்களின் நிலை உலக நாடுகளை கவலை கொள்ள செய்திருக்கிறது.

வட அமெரிக்க நாடான கனடா, உலகெங்கும் இருந்து பொருளாதார மேம்பாட்டுக்காக புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கனவு தேசமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது.பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டதன் விளைவாக, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கனடா கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

மளிகை பொருட்கள் விலை உச்சம் தொட்டு வருகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று அங்கு ஆய்வு நடத்தியது. அதில் 25சதவீத கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வீட்டு வாடகை, மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய, தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர்.

Readmore: கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும்!. உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை!

English Summary

Shock!. Scattered food pancha!. A bread packet Rs.1,100!. Woe to Canada, Gaza!

Kokila

Next Post

ஓய்வூதியம் பெறும் நபர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும்...!

Sun Nov 24 , 2024
Pensioners must obtain a digital life certificate by November 30th, it has been announced.

You May Like