தலைநகர் டெல்லியின் அருகே உள்ள கிராமத்தின் சலூன் கடையில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியின் அருகே உள்ள கிராமமான நஜாப்கர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள சலூன் கடைக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காண காவல்துறை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த சில காலங்களாகவே டெல்லியில் தாக்குதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். கோஷ்டி மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் பொதுமக்களிடையே பதற்றம் நிலவுகிறது.