fbpx

சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்…..! கணவன் செய்த கொடூர செயல்…..!

70,000 ரூபாய் கொடுத்து திருமணம் செய்த பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் உட்பட மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, டெல்லி பதேபூர் பெரி என்ற பகுதியில், ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அந்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் பிறகு, அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கு நடுவே, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த சமயத்தில், கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரு ஆட்டோ, அந்த பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. ஆகவே, அந்த ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து, அந்த ஆட்டோ ஓட்டுநர் அருணை காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கிறது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண், தரம்வீர் என்பவரின் மனைவி ஸ்வீட்டி என்று தெரியவந்துள்ளது.

ஆதரவற்ற பெண்ணான அவரை ரூபாய் 70,000 பணம் கொடுத்து, தரம்வீர் திருமணம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வபோது அவரிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஸ்வீட்டி. மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே தங்கி இருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது.

ஆகவே, அவரது நடத்தையில் தரம்வீர் சந்தேகப்பட்டு உள்ளார். பின்னர், அவரை, கொலை செய்ய திட்டமிட்ட அவர், அரியானா எல்லையில், கழுத்தை நெரித்து கொலை செய்து, காட்டுப் பகுதியில், வீசியதாக கூறியுள்ளார் அந்த ஆட்டோ ஓட்டுனர். இந்த கொலை சம்பவம் குறித்து, தரம்வீர், சத்யவான், அருண் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Next Post

முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!… கல்லூரி கல்வி இயக்குனரகம்!

Fri Aug 11 , 2023
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like