fbpx

Shocking Video..!! இரவில் இளம்பெண்ணை அந்த இடத்தில் தொட்டு தொல்லை கொடுத்த போலீஸ்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், இரவு நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளம் பெண்ணை போலீஸ்காரர் பிடித்து இழுத்து தகாத முறையில் தொடுவதைப் பார்க்க முடிகிறது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்பனா டாக்கீஸ் அருகே இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்து, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல்துறையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. “பாஜக ஆட்சியில், காவலர்களே வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டனர். போபாலில் உள்ள அல்பனா டாக்கீஸ் அருகே, இரவில் தனிமையில் நின்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது” என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மேலும் 4 மாவட்டங்களில் 5ஜி சேவை..!! அசத்திய ஏர்டெல்..!! எங்கெங்கு தெரியுமா..?

Thu Mar 9 , 2023
பாரதி ஏர்டெல் நிறுவனம், 125 நகரங்களில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி இருந்தது. தற்போது கூடுதலாக சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையானது இப்போது மொத்தம் 265 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் ஃபோனில் 5ஜி சேவையை எப்படி […]

You May Like