மதுரை, புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் செல்போன், கேமரா மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. கோயிலில் உள்ளே உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அருண் போட்டோகிராபி, ஸ்டாலின் போட்டோகிராபி, ஒன் கிளிப் போட்டோகிராபி, சீரா போட்டோகிராபி மற்றும் அருவி போட்டோகிராபி ஆகியோர் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுத்து தங்களின் Logo வைத்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆகவே அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனி நபர்கள் எடுக்காத வண்ணம் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். என வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, மதுரை மீனாட்சியம்மன் கோவில் தரப்பில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.