fbpx

“எங்கள் நட்பு தொடரும்..!” தொடர் வதந்திகளால் மனமுடைந்த பாடகி சைந்தவி பதிவு!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷை பிரிவதாக பாடகி சைந்தவி அறிவித்துள்ள நிலையில், அவர்களது உறவு குறித்து யூடியூப் சேனல்களில் வெளியாகும் வீடியோக்கள் வருத்தம் அளிப்பதாக சைந்தவி வேதனை தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ள ஜிவி பிரகாஷ் வெயில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து இருவரின் திருமண உறவு முறிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக, யூடியூப் சேனலில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் ‘ப்ரைவேசி’யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.

எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியினாலும் நிகழ்ந்தது அல்ல. மேலும் ஆதாரமற்ற முறையில் ஒருவரை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு.நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருட நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், “தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Read More ; “இந்தியா நிலவில் கால் பதிக்கிறது.. நம் குழந்தைகள் சாக்கடையில் விழுகுது!” – பாகிஸ்தான் எம்.பி ஆதங்கம்

Next Post

இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது...!

Thu May 16 , 2024
இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்து அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் ரோந்து சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்த […]

You May Like