இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களால், நடத்தி வைக்கப்படும் திருமணத்தை விட, காதல் திருமணங்களே அதிகம் நடைபெறுகின்றன. அதோடு, பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அவர்கள் சரியான வயது திருமணம் செய்து வைக்க மாட்டார்களோ, என்ற பயத்தில் கூட காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.
ஆனால், அப்படிப்பட்ட காதல் திருமணங்களிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. காதல் திருமணம் செய்து கொண்டால், வீட்டில் பெற்றோர்கள், அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சில பெற்றோர்கள் அதனை மனதார ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும், இன்னமும் பலர் இந்த காதல் திருமணத்தில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷினி (21) அதேபோல, விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் எஸ்வந்த்ராஜ் இவர்கள் இருவரும் காங்கேயம் பகுதியில் இருக்கிற இருவேறு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஒரே ஊரில் பணியாற்றி வருவதால், இருவரும், அவ்வப்போது, பார்த்து பேசிக்கொள்வதுண்டு, அந்த பழக்கம் நாரடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்தது. ஆகவே இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை, ஒருவர் மனதார காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் நாளடைவில், அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரத்திற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த நிலையில்தான் காதல் ஜோடி இருவரும், ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டனர். அதாவது, இருவரும் யாருக்கும் சொல்லாமல், வீட்டை விட்டு வெளியேறி, பின்பு ஒரு ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு காவல் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு, தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதன் அடிப்படையில், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், காதலர்கள் இருவருடைய பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து, காவல் நிலையத்திற்கு வரவழைத்து, விசாரணை நடத்தினர். இதில், எஸ்வந்த்ராஜ் பெற்றோர்கள், இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காதல் ஜோடிகள் இருவரும், எஸ்வந்த்ராஜின் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.