fbpx

கடந்த 24 மணி நேரத்தில் 6 மரணம்.! 692 பேருக்கு புதிய தொற்று.! வேகமெடுக்கும் கொரோனா.! அச்சத்தில் மக்கள்.!

கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களை அச்சுறுத்திய கொரோனா பெரும் தொற்று தற்போது இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. மேலும் 6 பேர் கொரோனா தொற்றுக்கு பலியானதாகவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,097 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிற்கு ஆறு பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் 2 பேரும் டெல்லி கேரளா மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகி இருக்கின்றனர். கேரள மாநிலத்தில் டிசம்பர் ஒன்பதாம் தேதி கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வகையான ஜே என் 1 வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக பரவி வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்த புதிய வகை வைரஸ் தொற்று மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது டெல்லியிலும் ஒருவருக்கு கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் எச்சரித்துள்ளது. குளிர்காலங்களில் இது போன்ற தொற்றுகள் வேகமாக பரவும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வேகமாக பரவிய கொரோனா பெருந்தொற்றிற்கு இதுவரை 4,50,10,944 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறையை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. தற்போது இறந்த 6 நபர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,33,346 ஆக உயர்ந்திருக்கிறது.

Next Post

’விஜயகாந்தின் மூளை நரம்பு வெடித்து வார்த்தைகள் சிதற இவர்கள் தான் காரணம்’..!! அதிர்ச்சி தகவல்..!!

Thu Dec 28 , 2023
விஜயகாந்தின் உடல்நலம் எப்போது பாதிக்கப்பட்டது யாரால் பாதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மதுரையில் பெரிய அரிசி ஆலை அதிபரின் மகனாக பிறந்தாலும் சினிமாவில் சாதித்தே தீருவேன் என கூறிக் கொண்டு சென்னை வந்தார் விஜயகாந்த். அங்கு வாய்ப்பு தேடி அலையும் போது சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு இடைவேளையின் போது செல்வாராம். அப்போது விஜயகாந்திடம் எதையுமே சொல்லாமல் அங்கிருப்பவர்கள் சாப்பிட சென்றுவிடுவார்களாம். விஜயகாந்துக்கு பசி வயிற்றை […]

You May Like