fbpx

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்கை பஸ்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்கை பஸ் எனப்படும் பறக்கும் பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்..

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் தலைநகர் மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக இந்தியாவில் முதல் ஸ்கை பஸ் திட்டம் தொடங்கப்பட உள்ளது.. டெல்லி மற்றும் ஹரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இந்த சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது..

​​மாசுபாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி ஒரு நல்ல உத்தியாக இல்லாததால், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதே, அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை.. மாசுபாட்டைக் குறைக்க நான் தௌலா குவானிலிருந்து மனேசருக்கு ஸ்கைபஸ் போக்குவரத்தை தொடங்க விரும்புகிறேன், பின்னர் அதை சோஹ்னா வரை நீட்டிக்க விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்..

ஸ்கைபஸ் என்றால் என்ன..? ஸ்கைபஸ் என்பது மெட்ரோவைப் போலவே இருக்கும் ஒரு ரயில்வே அமைப்பாகும், இந்திய அரசாங்கம் 2004 இல் ஸ்கைபஸ் மெட்ரோவின் சோதனைகளை முதன்முதலில் தொடங்கியது, ஆனால் அப்போது நடந்த விபத்தில் ஒரு ஊழியர் உயிரிழந்ததால் அந்த சோதனை நிறுத்தப்பட்டது.. ஸ்கைபஸ்கள் சுமார் 100கிமீ/மணி வேகத்தில் பயணிக்கலாம்.. தௌலா குவான் முதல் மனேசர் வரையிலான ஸ்கைபஸ் திட்டத்தை தொடங்கும் கட்கரியின் திட்டம் வெற்றியடைந்தால், அந்தத் தூரத்தை கடக்க சுமார் 24 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

”மாணவர்களுக்கு அந்த எண்ணம் மட்டும் கூடவே கூடாது”..! - முதலமைச்சர் முக.ஸ்டாலின்

Tue Jul 26 , 2022
தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து வருவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50-ஆம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், ”கொரோனா தொற்றால் தன் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால், தன்னுடைய […]
தலைவர் பதவிக்கு அக்.7இல் முக.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!! அக்.9இல் திமுக பொதுக்குழு கூட்டம்..!!

You May Like