fbpx

’தூக்கம் கெடுகிறது’..!! ட்ராலி பேக்குகளுக்கு தடை விதித்த நாடு..!! மீறினால் அபராதம்..!! எங்கு தெரியுமா..?

மக்கள் தினமும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். தினம் தினம் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் எல்லாம் நிரம்பிக்கொண்டு தான் இருக்கின்றன. மக்கள் பயணத்தின் போது லக்கேஜ்களுக்கு வெவ்வேறு பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பைகள் அதிக எடை உள்ளதாக இருந்தால் கையில் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாக இப்போதெல்லாம் அதிக எடை உள்ள பொருட்களை சிரமம் இல்லாமல் நகர்த்திச் செல்ல சக்கர பைகள்/பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் கனமான பொருட்களை எடுத்துச் செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பயண பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது படிப்படியாக அதிக ஸ்டைலான பைகளை சந்தையில் கொண்டு வருகின்றன. ஆனால், சக்கரம் பொருத்தப்பட்ட பைகள் பயன்பாட்டை தடை செய்துள்ள ஒரு நாடும் உள்ளது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், உண்மை.

ஐரோப்பிய நாடான குரோஷியாவில் உள்ள டுப்ரோவ்னிக் நகரம் அதன் அழகுக்கு பெயர் பெற்றது. இந்த நகரம் மிகவும் பழமையான ஐரோப்பிய கலாச்சாரத்தின் அருங்காட்சியகமாக உள்ளது. அதன் கட்டிடங்கள், சாலைகள் அனைத்தும் பழமையானது. இந்த அழகை பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பயணம் செய்து செல்லும் பயணிகள் இங்கு அனைத்து விதமான பைகளையும் எடுத்து செல்லலாம். ஆனால், அதில் சக்கரங்கள் இருக்கக்கூடாது. மேலும், நகரத்தில் சக்கர சூட்கேஸ்களை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தடை தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரோஷியா நகரின் பல தெருக்கள் மற்றும் சாலைகள் கல்லால் ஆனவை. அவை தான் குரோஷியா நகரின் தனித்துவமான பழமையான தோற்றத்தை அளிக்கிறது. இந்த சாலைகளில் சக்கர பைகளுடன் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது அதிக சத்தம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கூட இந்த சத்தத்தால் உள்ளூர் மக்களுக்கு தூக்கம் பாதிக்கப்படுகிறதாம். இதனால் சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள், இப்பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதோடு சக்கர பைகளை சாலையில் இழுத்து செல்லும்போது பழமையான சாலையும் சேதமடைகிறது. இதைத் தொடர்ந்து, நகர மேயர் மேடியோ பிராங்கோவிக் புதிய விதியை அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய விதியின்படி, சக்கரங்கள் கொண்ட பைகளுக்கு மட்டுமே நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி யாரேனும் பையுடன் சுற்றித் திரிந்தால் ரூ.23 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டும் இல்லாமல் கடந்த நவம்பர் மாதம் முதல் மக்கள் தங்கள் பொருட்களை ஊருக்கு வெளியே டெபாசிட் செய்துவிட்டு ஊருக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பெண்களின் உள்ளாடைகளை திருடி சுய இன்பம் காணும் காமக்கொடூரன்..!! கேமராவில் சிக்கிய பக்கத்துவீட்டுக்காரர்..!! பயங்கர ஷாக்..!!

Mon Jul 3 , 2023
கர்நாடகா மாநிலம் பெங்களூரு லாகேரே அருகே நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அங்குள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்விடுமாம். மொட்டை மாடிகளில் துணிகளை காயப்போட்டுவிட்டு போனால், அவை திருடு போயுள்ளது.. எல்லா துணிகளும் அங்கு இருக்கும்போது, கரெக்ட்டாக உள்ளாடைகள் மட்டும் மாயமாகி விடுகிறதாம். மேலும், ஆளில்லாத வீடுகளிலும் பெண்களின் உள்ளாடைகள், ஜாக்கெட்டுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் குவிந்தன. அதிலும் […]
பெண்களின் உள்ளாடைகளை திருடி சுய இன்பம் காணும் காமக்கொடூரன்..!! கேமராவில் சிக்கிய பக்கத்துவீட்டுக்காரர்..!! பயங்கர ஷாக்..!!

You May Like